News Just In

1/07/2024 05:47:00 PM

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிசாரால் முற்றுகை!








மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை முனைக்காடு வாவிகரை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று சனிக்கிழமை (06) பொலிசார் முற்றுகையிட் நிலையில், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது பெருமளவிலான கோடா மற்றும் 9 பெரல், கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டு கொக்கட்டிச்சோலை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகரி பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தெரிவித்தார்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று பகல் கொக்கட்டிச்சோலை முனைக்காடு வாவிகரை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதன் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் பொலிசாரைக் கண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதையடுத்து பெருமளவிலான கோடாவை மீட்டு அழித்ததுடன் கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் மற்றும் 9 பெரல்களை மீட்டு கொக்கட்டிச்சோலை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

No comments: