முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொழும்பில் தற்சமயம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.கெஹலியவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீதி நாடகமும் அரங்கேற்றப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக் களத்தில் மலர் வளையங்கள், மற்றும் உயிரிழந்த சடலங்களைப் போல உருவங்களை வடிவமைத்து தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இலங்கையில் சுகாதார துறையில் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலியவே பதில் கூற வேண்டும் என தெரிவித்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அத்துடன், முன்னாள் அமைச்சர் கெஹிலிய கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
போராட்டக்களத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: