தமிழ்த்தேசியத்தில் உறுதிக்கொண்ட தலைவர் ஒருவரை நியமிப்பதில் சுமந்திரன் ஆதரவாளர்களின் முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை பிரதேசத்தில் இருக்கக்கூடிய இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை தலைவர் தவராசா சர்ஜீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்தேசியத்தின் பால் உள்ள பற்றுறுதியை கொண்டு செயற்படும் ஒருவரை நியமிப்பதில் உறுப்பினர்கள் தீவிரமாக உள்ளனர்.
அந்த வகையில், வாக்கெடுப்பிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களை பொறுத்தமட்டில் தமிழ்தேசியத்தின் பால் உள்ள பற்றுறுதியை கொண்டு செயற்படும் சிறீதரன் அவர்களையே தெரிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
கட்சி மீதான பல திட்டங்களை மையப்படுத்தியே தற்போது வாக்குகளை வழங்க தீர்மானித்துள்ளதுடன், சிறீதரன் அவர்களே சிறந்தவர் எனவும் உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஜனாதிபதி சட்டத்தரணியாக சட்டத்துறையில் சிறந்து விளங்குபவர் சுமந்திரன். ஆனால் தற்போது அவர் தலைமை பதவிக்கு வருகின்றார் என்ற போது பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

சர்வதேச சார்ந்த விடயங்களில் சுமந்திரன் அவர்கள் பல விடயங்களை கையாண்டு வந்துள்ளதுடன், அவருக்கு கட்சியில் உள்ள முக்கிய பதவிகளை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments: