
மட்டக்களப்பின் உன்னிச்சை, அம்பாறை ரம்புக்கள் ஓயா ஆகியவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் அப்பிரதேச மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 169.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில் உன்னிச்சை, நவகிரி, வடமுனை, வெலியாகந்தை குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவுகளும், நவகிரிகுளம், றூகம்குளம், வடமுனைகுளங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
அதேவேளை அம்பாறை ரம்புக்கன் ஓயாவின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள மையால் மட்டக்களப்பு செங்கலடி, சித்தாண்டி பகுதியில் வெள்ளம் ஏற்படும் நிலைமை காணப்படுகின்றதுடன் மட்டு நவகிரிகுளம் வான்கதவு திற்கப்பட்டுள்ளாதால் வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மக்களும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் அறிவித்துள்ளது.
இதேவேளை கனமழையால் பல பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதோடு, வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் 56 குடும்பங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments: