News Just In

1/01/2024 02:27:00 PM

சிபெட்கோ விலைய விட 3 ரூபாவால் குறைத்து எரிபொருளை விற்பனை செய்யும் சினோபெக்!



இலங்கை பெற்றோலியக் கூடடுத்தாபனத்தின் (சிபெட்கோ) விலையை விட 3 ரூபா குறைவாக 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசலை விற்பனை செய்ய சினோபெக் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 17 ரூபாவினால் அதிகரித்து அதன் புதிய விலை 363 ரூபாவாகவும், ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் புதிய விலை 355 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 லீற்றர் ஒரு லீற்றர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 464 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் 41 ரூபாவினால் அதிரகிகப்பட்டு 475 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments: