News Just In

1/16/2024 02:54:00 PM

1550 கிலோகிராம் எடையுடைய வாகனத்தை தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை!



சாவகச்சேரி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த திருச்செல்வம் என்பவர்,தனது தலைமுடியைப் பயன்படுத்தி 1550 கிலோகிராம் எடை கொண்ட வாகனத்தை இழுத்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற குறித்த சாதனை நிகழ்வில், 60 வயதான திருச்செல்வம் தனது தலைமுடியினைக் கொண்டு 19 நிமிடம் 45 செக்கன்களில் 1500 மீற்றர் தூரம் வரை வாகனத்தை இழுத்துச் சென்று குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் சாந்தாதேவி, சமூகசேவகர் அகிலன் முத்துக்குமாரசுவாமி, தென்மராட்சி அபிவிருத்திக்கழக தலைவர் கயிலாயபிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

திருச்செல்வம், கடந்த வருடம் தனது தாடியைப் பயன்படுத்தி சுமார் 1500 கிலோ எடை கொண்ட வாகனத்தை 7 நிமிடங்களில் 400மீற்றர் தூரம் இழுத்து உலக சாதனை படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments: