News Just In

12/27/2023 09:27:00 AM

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் "அறிவுச் சமர் சீசன் II" போட்டி!



நூருல் ஹுதா உமர்
தமது 75 வது ஆண்டில் காலடியெடுத்து வைத்திருக்கின்ற கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பவளவிழாவை முன்னிட்டு, கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், அறிவுச் சமர் கலை மன்றத்துடன் இணைந்து நடாத்துகின்ற கல்முனை வலய 1AB தர தேசிய பாடசாலைகளுக்கிடையிலான "அறிவுச் சமர் சீசன் II" போட்டி நிகழ்சிகள் (26) கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் கல்முனை ஸாஹிறாக் கல்லூரி, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி, நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலை, காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி, கல்முனை உவெஸ்லி உயர் கல்லூரி, மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மற்றும் மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி ஆகியன மோதுகின்றன.

இப்போட்டிகளுக்கு றியோ மார்கட்டிங் நிறுவனம் அனுசரனை வழங்குகிறது.

No comments: