News Just In

12/27/2023 12:15:00 PM

நாட்டில் மீண்டும் விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பம்!




நாடளாவிய ரீதியில் கடந்த இரு தினங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரின் விஷேட நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (27.12.2023) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டிகை கால விசேட கடமைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியமையினால் 03 நாட்களுக்கு அந்த நடவடிக்கைகளை குறைக்க நேரிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த (25.12.2023) ஆம் திகதி வரை போதைப்பொருளுடன் தொடர்புடைய 13,666 பேர் “யுக்திய” நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 1,097 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: