கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலைமையில் திருகோணமலையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது கிழக்கு மாகாண வரலாற்றிலேயே மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேலால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் குறித்த கிறிஸ்மஸ் மரம் திருகோணமலை டச்பே (DUCHBAY) கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அங்கு இடம்பெற்ற விசேட சமய ஆராதனை நிகழ்வுகளில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டுள்ளார்.
மேலும், திருகோணமலை டச்பே (DUCHBAY) கடற்கரையில் அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தின் முன்னிலையில் இதுவரை 10ஆயிரத்துக்கும் அதிகமானோர் புகைப்படங்களை எடுத்துக்கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரள, மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி உட்பட திணைக்கள தலைவர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
No comments: