News Just In

11/01/2023 03:02:00 PM

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது!



டீசல் விலை அதிகரிக்கப்பட்டாலும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை மாகாண பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் இன்று (1ம் திகதி) காலை அம்பலாங்கொடையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக மூன்று தடவைகள் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், தமது தொழிற்சங்கம் போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரித்தாலும் பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் பொருளாதாரப் பின்னணியைக் கருத்தில் கொண்டு போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என ருவான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் எரிபொருட்களின் விலை அதிகரிக்குமாயின் தமது சங்கங்கள் வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அவ்வாறு நடந்தால் பாரிய எதிர்ப்புப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் எனவும் ருவான் தெரிவித்துள்ளார்.

No comments: