News Just In

11/01/2023 02:39:00 PM

கழுத்து, முகம் அழுத்தப்பட்டதன் காரணமாகவே தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் உயிரிழக்க நேர்ந்தது : நீதிமன்றம் தீர்ப்பு



கழுத்து மற்றும் முகம் அழுத்தப்பட்டதன் காரணமாகவே தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் உயிரிழக்க நேர்ந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு நீதிவான் நீதிமன்றமே இன்று (01) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதன் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த மேலதிக நீதிவான், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

மரண விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கைகள் என்பனவற்றை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதிவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

No comments: