
காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
இராணுவத்தினர் காசாவின் மையபகுதியில் நிலைகொண்டுள்ளனர் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடல் வான் தரைவழி தாக்குதல்களை மேற்கொண்டு படையினர் காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
காசாவை சுற்றிவளைத்து படையினர் அதன் உள்ளே நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
காசா மக்களை தயவு செய்து தெற்கிற்கு செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments: