News Just In

10/03/2023 06:42:00 PM

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்!

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்




தேசிய கல்வியியல் கல்லூரி வளாகமாக மேம்படுத்தி கல்வி தொடர்பான பல்கலைக்கழகத்தைத் தாபிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக்கும் நோக்கில் தற்போது நடைமுறையிலுள்ள கல்வியல் கல்லூரிகளை பல்கலைக்கழகப் பீடங்களாக உயர்த்துவதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நிர்வாக மற்றும் சட்டப் பொறிமுறைகள் தொடர்பாகப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக 2019.12.04 திகதி அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய மூத்த பேராசிரியர் குணபால நாணயக்கார தலைமையில் நிபுணத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் பரிந்துரைகள் தற்போதுள்ள 20 கல்வியல் கல்லூரிகளில் 19 கல்லூரிகளை பல்கலைக்கழக வளாகமாக உயர்த்துவதற்கும், அத்துடன் இலங்கை கல்வியியல் பல்கலைக்கழகம் எனும் பெயரில் புதிய பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கும் ஏதுவான சட்ட ஏற்பாடுகளை விதிப்பதற்கு புதிய சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

No comments: