News Just In

9/09/2023 12:27:00 PM

மீண்டும் கொரொனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!




கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் உயர்வடைந்துள்ளது.

வான்கூவாரில் கூடுதல் எண்ணிக்கையில் நோயாளர்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் தற்போதைக்கு தொற்று பரவுகை நிலைமையாக பிரகடனம் செய்ய முடியாது என மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வேறு நோய்களுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா நோய் அறிகுறிகள் தென்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட வேறும் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நோய்த் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக என மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments: