சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை நாய் என தெரிவித்து அவரை கொலை செய்ய வேண்டும் என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானா சனல் 4க்கு தெரிவித்துள்ளார்.
“இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் - டிஸ்பார்ச் வெளிப்படுத்துகிறது” என்ற தலைப்பில் பிரிட்டனின் சனல் 4 செய்தி சேவை ஆவணப்படமொன்றை ஒளிபரப்பியிருந்தது.
அந்த காணொளியில் ஆசாத் மௌலானா மேலும் கூறுகையில், மிக் விமான கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் லசந்த விக்ரமதுங்க செய்திகளை வெளியிட்டமை கோட்டாபய ராஜபக்சவை கடும் சீற்றத்திற்கு உள்ளாக்கியிருந்தது.
இந்த நிலையில் பிள்ளையானையும் தன்னையும் அவசர சந்திப்பிற்கு அழைத்த கோட்டாபய ராஜபக்ச லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்ததாக ஆசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.
No comments: