(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
சர்வதேச சைகை மொழி தினத்தினைகொண்டாடுமுகமாக செவிப்புலனற்றோர் சங்கங்கள் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலம் இன்று மட்டக்களப்பு நகரில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு செவிப்புலனற்றோர் அலுவலகம் முன்பாக ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு திருகோணமலை வீதி வழியாக மட்டக்களப்பு நகரின் பலவீதிகளிலும் பயணித்த பின் மட்டக்களப்பு நகர மண்டபத்தை சென்றடைந்தது.
இதன் பின்னர் எழுச்சி கொண்டாட்ட நிகழ்வுகள் மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் நடைபெற்றன. கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் இளம் குமுதன் வைபவ ரீதியாக இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். செவிப்புலன ற்றோர் எங்கு வேண்டுமானாலும் சைகை மொழியை பயன்படுத்தக்கூடிய உலகம் உருவாக்க வேண்டும் என்ற துணைப் பொருளில் இந்த நிகழ்வுகள் இடம் பெற்றன.
வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த செவிப்புலனற்றோர் சங்கங்களின் உறுப்பினர்கள் பெருமளவில் இந்த சைகை மொழி தின கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

No comments: