
சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை தேசிய பாடசாலையில் உயர் தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி யு. நஜீபா ஏ. றஹீம் தலைமையில் இன்று (11) இடம் பெற்றது.
இன் நிகழ்வில் உயர் தர பிரிவு இணைப்பாளர் எம்.எம்.ஏ காதர்,பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 60க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: