ஆசியக் கிண்ணம் : கொழும்பு, கண்டி மைதானங்களின் பராமரிப்பாளர்கள், ஊழியர்களுக்கு சன்மானம்
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கிலும் கண்டி பல்லேகலை விளையாட்டரங்கிலும் பணியாற்றும் பராமரிப்பாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒன்றரை கோடி ரூபா சன்மானம் வழங்க ஆசிய கிரிக்கெட் பேரவையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனமும் தீர்மானித்துள்ளன.
இரண்டு விளையாட்டரங்குகளிலும் ஊழியர்கள் தங்களது பணிகளை அர்ப்பணிப்புடனும் செவ்வணேயும் ஆற்றியதை கௌரவிக்கும் வகையிலேயே சன்மானம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் படி 50,000 அமெரிக்க டொலரல்கள் (.இலங்கை நாணயப்படி ஒரு கோடியே 61 இலட்சம் ரூபா) வழங்க்பபடவுள்ளது.
இரண்டு விளையாட்டரங்குகளிலும் சுமார் 300க்கும் மெற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
ஆசிய கிண்ணப் போட்டி முழுவதும் அவர்களது அர்ப்பணிப்புத் தன்மையும் அசர வேகத்தில் ஆற்றிய கடமையும் கடின உழைப்பும் முழு கிரிக்கெட் உலகையும் பிரமிக்க வைத்தது. அதன் மூலம் அதிவேக மைதான பணியாளர்கள் என்ற பெருமையை அவர்கள் பெற்றனர்.
கிரிக்கெட் வெற்றி அடைவதில் இந்த ஊழியர்கள் வகித்த முக்கிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலேயே இந்த சன்மானம் வழங்கப்படுகிறது.
அவர்களது மகத்தான சேவையை பாராட்டி கௌரவிப்போம் என ஆசிய கிரிக்கெட் பேரவைத் தலைவர் ஜெய் ஷா குறிப்பிட்டுள்ளார்.
No comments: