News Just In

9/15/2023 11:34:00 AM

சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரிகளுக்கு உயர்பதவிக் கடிதம் வழங்கி வைப்பு!




(அபு அலா )
வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பதில் செயலாளராக ஏ.மன்சூர் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எம்.எம்.நசீர் ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்ற செந்தில் தொண்டமான் அவர்களின் இற்றைவரையான காலப்பகுதியில் மதம் சார்ந்து எந்த நியமனங்களையும் வழங்கவில்லை, தகுதி மற்றும் திறமைகளை அடிப்படையாகக் கொண்டே அரச நியமனங்களை அவர் வழங்கி வருகின்றார் என கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.

மேலும், கிழக்கு மாகாணத்தின் அனைத்து நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் முஸ்லிம்களின் கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments: