News Just In

9/07/2023 07:51:00 PM

சனல் 4 விவகாரம்! ராஜபக்சக்களின் கழிவறைகளை கழுவிய சுரேஷ் சாலி: பொன்சேகா வெளியிட்டுள்ள நம்பிக்கை!





உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் சுரேஷ் சாலி ஈடுபட்டுள்ளார் என்பதை நான் நம்புகின்றேன், அத்துடன் அவர் ராஜபக்சக்களின் கழிவறைகளை கழுவியவர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமாகும். அதேவேளை தெரிவு செய்யப்பட்ட குழுக்கள் எந்த நோக்கத்தையும் நிறைவேற்றாது.

சர்வதேச விசாரணை நடத்த அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் சுரேஷ் சாலி ஈடுபட்டுள்ளார் என நான் நம்புகிறேன். அவர் ராஜபக்சக்களின் கழிவறைகளை கழுவியவர்.

2019ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதல்களிலும் ஈடுபட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

No comments: