News Just In

8/16/2023 11:00:00 AM

இனவாதம் கக்கித் தமிழரைச் சீண்டாதீர்கள்! தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை!!




இனவாத, மதவாதக் கருத்துக்களைத் தெரிவித்து வடக்கு, கிழக்கு தமிழர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என தெற்கு அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கொடூர போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழர்கள் நிம்மதியான வாழ்வையே விரும்புகின்றார்கள்.

அவர்கள் சம உரிமைகளைத்தான் கேட்கின்றார்கள். இன்னொரு போரை அவர்கள் விரும்பவில்லை.

இந்நிலையில், இனவாத, மதவாதக் கருத்துக்களைத் தெரிவித்து அவர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என்று தெற்கு அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

இதை நான் சொல்வதால் எனக்கு எதிராகவும் விமர்சனங்கள் வரக்கூடும். அதை நான் பொருட்படுத்த மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

No comments: