News Just In

8/14/2023 08:06:00 AM

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்காலத்தில் பத்தாம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய்வதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஆரம்ப காலங்களில் இந்தப் பரீட்சை பத்தாம் வகுப்பில் நடத்தப்பட்டது. எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் கல்வி மறுசீரமைப்பின்போது இது பற்றி கவனம் செலுத்தப்படும்.

பிள்ளைகள் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு தமது துறைகளை சுயமாகத் தெரிவு செய்யும் வகையில் கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி 10 ஆம் தரத்தில் கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சையை நடத்துவதற்கான வாய்ப்பு தொடர்பில் தற்போது உரிய தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாகவும், எதிர்காலத்தில் கல்வி மாற்றத்திலும் இந்த விடயம் பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments: