முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரையானது, நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், பிக்கு ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
இந்துக்கள் சட்டவிரோதமாக வருகைத் தந்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்து பிக்குகள் அமைதியின்மையை தோற்றுவிக்க முயற்சித்த தருணத்தில், குறித்த பொலிஸ் அதிகாரி பிக்குவை நோக்கி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளியில் “அங்கு எங்களுடைய சிலைகளை உடைத்துள்ளார்கள்” என்று தேரர் கூற அதற்கு பதிலளிக்கும் உயர் பொலிஸ் அதிகாரி “ அது அங்கே! இங்கு அப்படியல்ல. இதை இந்தளவு சரி செய்து முடித்துள்ளார்கள். நீதிமன்ற உத்தரவையும் மீறி இந்த விகாரை இங்கு கட்டப்பட்டுள்ளது. அதற்கும் நாங்கள் நீதிமன்றில் பதில் சொல்ல வேண்டியுள்ளது. அதை புரிந்துகொள்ளுங்கள்.” என கூறியுள்ளார்.
No comments: