News Just In

8/01/2023 12:19:00 PM

இலங்கை கடற்பரப்பில் சிக்கிய 25 கோடி ரூபா பெறுமதியான பெருந்தொகை தங்கம்!

தலைமன்னாரிலிருந்து தமிழ்நாட்டுக்கு படகில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான 10 கிலோ தங்கத்துடன் நான்கு சந்தேகநபர்கள் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் வடக்கில் வசிப்பவர் எனவும் ஏனைய மூவரும் இந்திய பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் மீனவர் ஒருவரின் படகில் தங்கத்தை தமிழகத்திற்கு கொண்டு செல்வதற்காக கடல் எல்லைக்கு வந்த இந்திய படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்திய சுங்கத் துறையும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

No comments: