அரிய வானில் நிகழ்வுகளில் ஒன்றான ஒரே மாதத்தில் 2 சூப்பர் மூன்கள் தோன்றுவது இம்மாதத்தில் நிகழ உள்ளது. இதில் முதல் சூப்பர் மூன், நாளை வானில் தோன்ற உள்ளது.
முழு நிலவு நாட்களில் நிலா காட்சியளிக்கும் அளவை விட 8 மடங்கு அளவில் பெரியதாக காட்சியளிப்பதே சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது.
அதேவேளை பூமிக்கு சற்று நெருக்கமாக முழு நிலவு காட்சி அளிக்கும் சூப்பர் மூன் நிகழ்வு, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில் நிகழ்கிறது.
எனினும் , நடப்பாண்டு ஒரே மாதத்தில் 2 சூப்பர் மூன்கள் காட்சி தர உள்ளது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
அதன்படி, இன்று (1) நள்ளிரவு முதல் சூப்பர் மூனும் வரும் 30ம் திகதி 2வது சூப்பர் மூனும் தோன்ற உள்ளது. பொதுவாக ஒரே மாதத்தில் தோன்றும் 2வது சூப்பர் மூனை ப்ளூ மூன் என அழைக்கின்றனர்.
அதேவேளை அடுத்த சூப்பர் ப்ளூ மூன் 2032ம் ஆண்டில் நிகழும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று தோன்றவுள்ள முதல் சூப்பர் மூனை காண உலக மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
No comments: