டெஸ்லா கார் வாங்க ஆசையா? உங்களுக்கான மகிழ்ச்சியான செய்தி
மின்சார வாகனம் மூலம் உலகை ஆக்கிரமித்த டெஸ்லா நிறுவனத்தின் சமீபத்திய பாய்ச்சல் தொடர்பில் உலகின் கவனம் திரும்பியுள்ளது.
டெஸ்லா நிறுவனம் தனது புதிய தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவ திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், மீண்டும் டெஸ்லா குறித்த விவாதம் எழுந்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் தனது வாகனங்களை ஏற்றுமதி செய்வதை எளிதாக்கும் அடிப்படையில் தனது தொழிற்சாலையை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்திருந்தன.
இந்த நடவடிக்கை இந்திய கார் சந்தையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், இந்த புதிய டெஸ்லா தொழிற்சாலையின் மூலம் தயாரிக்கப்படும் ஒரு கார் சுமார் 2 மில்லியன் இந்திய ரூபாய்க்கு (US$ 24,400.66) விற்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை ரூபாவில் இதன் பெறுமதி சுமார் 75 இலட்சமாகும்.
7/13/2023 09:07:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments: