தெற்கு மெக்சிகோவில் உள்ள சான் பெட்ரோ ஹுவாமெலுலா நகரத்தின் மேயரான விக்டர் ஹ்யூகோ சோசா பாரம்பரிய விழா ஒன்றில் பெண் முதலையை மணந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
230 ஆண்டுகள் நடைமுறை
சோண்டல் மற்றும் ஹுவே பழங்குடியினக் குழுக்களுக்கு இடையேயான அமைதியை நினைவுகூரும் வகையில் இந்த திருமண சடங்கு 230 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேயர் சோண்டல் மன்னராக உருவெடுத்து முதலையை மணந்து இரு கலாச்சாரங்களின் ஐக்கியத்தை அடையாளப்படுத்துகிறார்.
முதலையுடன் நடனம்
விழாவுக்கு முன் மக்களின் வீடுகளுக்கு முதலையை நடனமாட அழைத்துச் செல்லப்படுவதாகவும் முதலைக்கு விரிவான உடையை அணிவிக்கப்பட்டு பாதுகாப்பிற்காக அதன் மூக்கை மூடியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: