News Just In

7/07/2023 08:26:00 PM

பழுதடைந்த மரக்கறிகள்! அசுத்தமான பாத்திரங்கள்: அதிர்ச்சியளிக்கும் மட்டக்களப்பு உணவகங்கள்!

பழுதடைந்த மரக்கறிகள்! அசுத்தமான பாத்திரங்கள்: அதிர்ச்சியளிக்கும் உணவகங்கள் !



மட்டக்களப்பில் சில உணவகங்களில் மனித பாவனைக்கு உதவாத உணவு தயாரிக்கும் பொருட்கள், உணவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த உணவகங்களில் மனித பாவனைக்கு உதவாத மரக்கறி வகைகளும், உணவு தயாரிக்கும் அறைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.


இதேவேளை சுத்தமும் பாதுகாப்பும் இல்லாத இடங்களாக இனங்காணப்பட்டு சுகாதார அதிகாரிகளினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சில உணவகங்கள் தற்காலிக சீல் வைக்கப்பட்டுள்ளன.

வீட்டு உணவை தவிர்த்து உணவகங்களை தினமும் நாடிச்செல்வோரின் நிலைமை குறித்து இதன்போது கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments: