News Just In

6/12/2023 10:04:00 AM

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பினால் CSMWA பேரவைக்கு நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிப்பு.!




நூருல் ஹுதா உமர்

பல்வேறு மக்கள் நலன்சார் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பிற்கு என்றும் உறுதுணையாக இருந்து வருகின்ற CSMWA பேரவையினை கெளரவிக்கும் நிகழ்வு (10) கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.

CSMWA பேரவையின் தலைவி ஃபிரோஸா காஸிம் இலங்கை வந்திருந்தபோதே இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு YWMA பேரவையின் தலைவி திருமதி. ஃபவாஸா தாஹா உட்பட அதன் உயர் நிருவாக உறுப்பினர்களும், YMMA பேரவையின் முன்னாள் தலைவர் தேசமானிய காலித் எம்.பாறுக், கனடாவில் வசிக்கும் பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளருமான முஹம்மது அஸார் அவர்களும், மற்றும் “கொழும்பு டைம்ஸ்” பத்திரிகை தலைமை பதிப்பாசிரியர் முஹம்மது ரஸூல்டீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments: