
எதிர்வரும் ஜுலை மாதம் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்வதற்கு முன்பாக இலங்கையின் உள்ளூராட்சி சபை மற்றும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் இன்னும் தீர்மானம் வழங்கவில்லை. எனினும் மாகாணசபை தேர்தல் தொடர்பில் இதுவரை அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் வெளிப்படுத்தவில்லை.
இதனால் ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்பாக அந்த இரு விடயங்கள் தொடர்பான உறுதியான நிலைப்பாட்டை இந்தியா எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: