News Just In

6/12/2023 07:22:00 AM

டியாகோ கார்சியா தீவில் சிக்கித்தவிக்கும் இலங்கை தமிழர்கள் தற்கொலை முயற்சி!

டியாகோ கார்சியா தீவில் சுமார் 2 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12 இலங்கையர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு காரணங்களுக்காக தீவுகளுக்கு அருகிலுள்ள கடல் எல்லையில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர்ந்தோர் இந்த பிரித்தானிய தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் முகாம்களில் கடைப்பிடிக்கப்படும் கடுமையான விதிமுறைகளாலும், விடுதலை நேரம் குறித்த நிச்சயமற்ற தன்மையாலும், இலங்கையர்கள் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

மேலும், அவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்கியுள்ளதுடன், தான் முகாமில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உடட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இலங்கையில் உயிராபத்து காரணமாக, கனடாவுக்கு தப்பிச்செல்லும் வழியில், பிரித்தானிய இந்திய கடல் கடந்த ஆள்புலங்களில் (British Indian Overseas Territory BIOT) ஒன்றான, டியாகோ கார்சியா (Diego Garcia) என்னும் தீவில் இவர்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, டியாகோ கார்சியா தீவில் சிக்கியிருந்த இலங்கை தமிழர்கள் இருவரின் அரசியல் தஞ்ச கோரிக்கைகள் கடந்த (02-04-2023) முதல் தடவையாக, நீண்ட கால போராட்டத்தின் பின்னர் பிராந்திய நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: