பொலிஸ் கான்ஸ்டபிளை சுடுவதற்கு முயற்சித்த முன்னாள் இராணுவ சிப்பாய்
ஹிம்புட்டான சல்மல் உயன பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சுடுவதற்கு முயற்சித்த, பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபருடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதான சந்தேக நபரிடமிருந்து துருக்கியில் தயாரிக்கப்பட்ட 9 மி.மீ துப்பாக்கி மற்றும் 10 உயிருள்ள தோட்டாக்கள், 5,250 மில்லி கிராம் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மீது கொலைகள், கொள்ளைகள் மற்றும் திருட்டுக்கள் தொடர்பான 20 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், 6 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments: