News Just In

6/17/2023 12:04:00 PM

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் அவசர கோரிக்கை!




தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது தொடர்பான வழக்கினை அவதானிப்பதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த இராஜதந்திரிகளை அனுப்ப வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், அமெரிக்காவை தளமாக கொண்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் சமீபத்திய சம்பவங்கள் குறித்து நாங்கள் கூட்டாக எழுகின்றோம், எங்கள் கரிசனைகளிற்கு தீர்வை காண்பதற்காக பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

No comments: