News Just In

6/19/2023 10:53:00 AM

பூப்பந்து சுற்றுப்போட்டியில் நண்பர்கள் பூப்பந்து அணி சாம்பியன்!

பலம் பொருந்திய 32 அணிகள் பங்கு பற்றிய பூப்பந்து சுற்றுப்போட்டியில் நண்பர்கள் பூப்பந்து அணிசாம்பியன் ஆனது.



நூருல் ஹுதா உமர்

நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட கட்டார் வாழ் இலங்கையர்களுக்கான இரட்டையர் பூப்பந்து சுற்று போட்டி தொடரில் நண்பர்கள் பூப்பந்து கழகம் சாம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டது. இந்த போட்டியில் சஹி மற்றும் தாணு ஆகியோர் நண்பர்கள் பூப்பந்து கழகம் சார்பில் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

சுற்றுத் தொடரின் ஆட்டநாயகன் விருதை சஹி தனதாக்கிக் கொண்டார்.


No comments: