யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக தெரியவருகிறது.
புத்தளத்தில் நேற்றைய தினம்(29.06.2023) இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி விஜயகலா மகேஸ்வரன் படுகாயமடைந்திருந்ததுடன் அவருடன் பயணித்த இருவரும் காயங்களுக்குள்ளாகியிருந்தனர்.
இதனை தொடர்ந்து அவர் புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் சேர்க்கப்பட்டு,தற்போது மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய சிலாபம் வைத்தியசாலை தரப்பினரை எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு கேட்ட போது விஜயகலா வீடு சென்றதாக தெரிவித்தனர்.
எனினும் விஜயகலா தரப்பில் இருந்து இது தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
எனினும் விஜயகலா தரப்பில் இருந்து இது தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வாகனம் மரமொன்றின் மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றிருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையினால் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே விபத்திற்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையினால் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே விபத்திற்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
No comments: