News Just In

4/03/2023 02:45:00 PM

பின்தங்கிய கல்லரிச்சல் கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் வசதி, வாழ்வாதார உலருணவு விநியோகம்!





- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு எல்லையிலுள்ள வாகரை பிரதேச செயலாளர்p பிரிவின் மிகப் பின்தங்கிய கல்லரிச்சல் கிராம மக்களுக்கு பல இலட்ச ரூபாக்கள் செலவில் சுத்திகரிக்கப்பட்ட நீரும். வாழ்வாதார உதவிகளும், உலருணவு விநியோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக சேவையாளரும் தன்னார்வ செயற்பாட்டாளருமான சிவநாதன் செல்வராணி தெரிவித்தார்.

பிரைற் பியூச்சர் இன்ரர்நேஷனல் யூகே அறக்கட்டளையின் உதவி கொண்டு கல்லரிச்சல் கிராமத்திலுள்ள சுமார் 44 குடும்பங்களுக்கு சுத்தமான குடி நீரை வழங்குவதற்காக சுமார் 44 இலட்ச ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நீர்த் தாங்கித் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வு கல்லரிச்சல் கிராமத்தில் இடம்பெற்றது. இந்த குடிநீர்த் தாங்கியில் ஒரே தடவையில் சுமார் 8 ஆயிரம் லீற்றர் நீரை சுத்திகரித்து மக்களுக்கு விநியோகிக்க முடியும்.

சமூக செயற்பாட்டாளர் செல்வராணி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரைற் பியூச்சர் இன்ரர்நேஷனல் யூகே அறக்கட்டளையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ரீ. நிஷாந்தன், திருக்கோவில் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே. பிரபாகரன், சமூகப் பணியாளர் என். சிறிதரன் உட்பட கிராம மக்களும் தொண்டர்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்வைத் துவக்கி வைத்து உரையாற்றிய சமூக சேவைச்; செயற்பாட்டாளர் செல்வராணி, வெளிநாட்டில் வாழ்ந்த போதிலும் தாயகத்திலுள்ள ஏழை எழிய மக்களின் துயர் துடைப்பதைப் பற்றியே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கும் புலம்பெயர் புண்ணியவான்களினால் இவ்வாறான உதிவகளைச் செய்ய முடிகிறது.

அந்த வகையில் வாய்விட்டுச் சொல்ல முடியாத வறுமையில் பின்தங்கிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒட்டு மொத்த கல்லரிச்சல் கிராம மக்கள் 44 குடும்பங்களும் இனிமேல் அவர்கள் குடிநீருக்காக கங்கை ஆற்றுக்கு நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியதில்லை. தமது காலடியில் குடிநீரைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதேவேளை ஏற்கெனவே பிரைற் பியூச்சர் இன்ரர்நேஷனல் யூகே அறக்கட்டளையின் உதவி கொண்டு இந்தக் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக 9 குடும்பங்களுக்கு ஆடுகளும் கொட்டில்களும், 12 குசுடும்பங்களுக்கு கோழிகளும் கூடுகளும் ஒரு குடும்பத்திற்கு மாடும் வழங்கப்பட்டுள்ளது. இப்பொழுது உலர் உணவு நிவாரணமாக 50 குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் புண்ணியவான்கள் அளிக்கும் இவ்வுதவிகளைத் துஷ்பிரயோகம் செய்யாது சிறந்த முறையில் பயன்படுத்தி பின் தங்கிய இல்லாத ஏழை மக்கள் முன்னேற வேண்டும்” என்றார்.

கவனிப்பாரின்றி இருந்த தமக்கு இந்த பரோபகாரிகளால் வழங்கப்பட்ட குடிநீர், வாழ்வாதார உத்விகள் மற்றும் உலருணவு நிவாரணம் என்பன பேருதவியாக அமைந்திருப்பதாக பயனாளிகளான கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.


No comments: