News Just In

4/12/2023 09:00:00 AM

காரைதீவு- மாளிகைக்காடு உணவங்கள் மீது திடீர் பரிசோதனை!

உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் தலைமையில் காரைதீவு மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் மற்றும் சிற்றுண்டி உற்பத்தி நிலையங்களில் இன்று (11) திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகளும், உணவு தயாரிக்க பொருத்தமற்ற பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டது.

உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றன காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதர் பைசால் முஸ்தபா தலைமையிலான பொதுசுகாதார பரிசோதர்களான கே. ஜெமீல், எம்.எம்.எம். சப்னோஸ் ஆகியோரால் பரிசோதிக்கப்பட்டது.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது உணவு சட்ட நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் நம் மக்களது சுகாதாரத்தையும், உணவுச் சுகாதாரத்தையும் நடைமுறைப்படுத்தவும், பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இவ்வாறான தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றோம் மேலும் இனிவரும் காலங்களில் பகல், இரவு நேர உணவு நிலைய திடீர் பரிசோதனைகளும் இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நூருல் ஹுதா உமர்

No comments: