கனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் 64 மில்லியன் டொலர் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
Lotto 6/49 சீட்டிலுப்பில் இவ்வாறு 64 மில்லியன் டொலர் பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் கனடாவில் இதுவரையில் வென்றெடுக்கப்பட்ட மிகப் பெரிய பரிசுத் தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
பரிசை வென்ற தனி நபர் அல்லது குழு தொடர்பிலான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்தப் பரிசுத் தொகையை இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
64 மில்லியன் டொலர் பணப்பரிசு வென்றெ வெற்றியாளர் அல்லது வெற்றியாளர்களை பார்ப்பதற்கு ஆவலுடன் இருப்பதாக அட்லாண்டிக் கனடா லொத்தர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வருட ஆரம்பத்தில் நோவா ஸ்கோட்டியாவின் நியூவோட்டர்போர்ட் பகுதியைச் சேர்ந்த 83 வயதான மேரி மெக்கார்த்தி என்பவர் 31 மில்லியன் டொலர்களை லொட்டோ மெக்ஸ் சீட்டிலுப்பில் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: