News Just In

3/15/2023 11:11:00 AM

சர்வதேச மகளிர் தின விழா : கேக் உற்பத்தியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கான போட்டியில் கல்முனை ரிப்னாவுக்கு முதலிடம்!




நூருல் ஹுதா உமர்

“அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்” எனும் தொனிப்பொருளின் கீழ் 112 ஆவது சர்வதேச மகளிர்தின நிகழ்வுகள் அண்மையில் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் பங்கு கொண்டிருந்தார்.

இந்நிகழ்வின் ஒரு அங்கமாக மாவட்டம் தழுவிய ரீதியில் கேக் உற்பத்தியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கான போட்டி நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்ட கேக் வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இறுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கேக் வகைகளை நடுவர்கள் அவதானித்து வெற்றியாளரைத் தீர்மானித்தனர். இதில் கேட்கின் வடிவமைப்பு, சுவை மற்றும் நேர்த்தியை பரிசீலித்து பரிசுகள் வழங்கப்பட்டன.

இதன்போது கல்முனையைச் சேர்ந்த திருமதி ஏ.சி. பாத்திமா ரிப்னா அவர்களின் CakMeAway என்ற நிறுவனத்தினால் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கேக் நடுவர்களால் முதல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கல்முனை cakmeaway நிறுவனத்தின் நிறுவனர் திருமதி ஏ.சி. பாத்திமா ரிப்னாவின் தயாரிப்புக்கு முதலிடம் கிடைத்தது. இந்நிகழ்வின்போது ரிப்னாவுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் என்பன வழங்கப்பட்ட அதேவேளை இரண்டாம் மூன்றாம் இடங்களைப்பெற்றவர்களும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.


No comments: