News Just In

3/16/2023 07:10:00 PM

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்தாமல் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவே விசாரிக்கப்படவுள்ளது.

அதன் பிரகாரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய அரச திணைக்களங்கள் பலவற்றை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தொடர்வதற்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

அரசியலமைப்பின் 10, 12(1) மற்றும் 14(1)(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த மனுவைத் தொடர உச்ச நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அனுமதி வழங்கியது.

மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (CPA) மற்றும் அதன் நிர்வாக பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதுடன், திறைசேரி செயலாளர், அரசாங்க அச்சக அதிகாரி, பொலிஸ் மா அதிபர் மற்றும் பலரை பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்

No comments: