- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்மாதிரியான இளைஞர்கள் பசுமையான இலங்கை திட்டம் ஏறாவூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.டபிள்யூ. இர்சாத் அலி தெரிவித்தார்.
இளைஞர் விளையாட்டு அமைச்சின்கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வழிகாட்டலில் ஏறாவூர் நகர பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மேற்படி நிகழ்வு ஏறாவூர் நகரில் வெள்ளிக்கிழமை 03.02.2023 இடம்பெற்றது.
ஏறாவூர் அல்முனீறா மகளிர் மகா வித்தியாலய சூழமைவு வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா, பிரதேச உதவிச் செயலாளர், ஏறாவூர் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எச்.ஏ. காரியப்பர், ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் பாடசாலை அதிபர் என்.எம். மஹாத் உட்பட இன்னும் அலுவலர்கள் கலந்து கொண்டு துப்பரவாக்கல் மற்றும் மரம் நாட்டும் பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.
நிகழ்வைத் துவக்கி வைத்து உரையாற்றிய ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா பசுமையான நகரம் எனும் தொனிப்பொருளின் கீழ் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு வேலைத் திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றோம். இதனை இன்னுமின்னும் சிறப்பாக முன்னெடுத்து பசுமையான நகரமாக உருவாக்குவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
“பசுமையான இலங்கை” திட்டத்தின் கீழ் ஏறாவூரில் ஒரு வார காலத்திற்கு தொடர்ச்சியான சிரமதான துப்புரவுப் பணிகளும் மர நடுகையும் இடம்பெறவிருப்பதாக இளைஞர் சேவை உத்தியோகத்தர் இர்சாத் அலி தெரிவித்தார்.
No comments: