News Just In

2/06/2023 03:11:00 PM

மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கொள்திறனை அபிவிருத்தி செய்வதற்கான இரு நாள் பயிற்சி பாசறை!!




(கல்லடி விசேட நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கொள்திறனை அபிவிருத்தி செய்வதற்கான இரு நாள் பயிற்சி பாசறை இன்று (06) திகதிமட்டக்களப்பில் உள்ள தொழில் வழிகாட்டல் நிலையத்தின்ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இலங்கை தொழில் வழிகாட்டல் நிலையத்தின் மாவட்ட மனித வள இணைப்பாளர் டபிள்யு.கொலின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன் கலந்து கொண்டதுடன் சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் (ஓய்வூ பெற்ற) ஆர்.ஜீ. வீரசிங்க வளவாளராக செயற்பட்டார்.

எமது மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுடையவர்களை வலுப்படுத்தி அவர்களுக்கான வழிகாட்டல் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குதல் மற்றும் அவர்களை தொழில் துறையில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது தொடர்பாக இச் செயலமர்வு இடம்பெற்றது.

இச் செயலமர்வில் போது கருத்து தெரிவித்த உதவி மாவட்ட செயலாளர் இப்பயிற்சி நெறியில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை விசேட தேவையுடையவர்களுக்காக பயன்படுத்தி அவர்களை வலுப்படுத்த வேண்டியது உத்தியோகத்தர்களாகிய உங்களுடைய கடமையாகும் என தெரிவித்தார்.


No comments: