விற்றோ எரிவாயு கொள்களன் ஒன்றுக்கூட இல்லாத குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முடித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புதிய கொள்களன் கையிருப்பு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், வர்த்தக எரிவாயு கொள்களன்களை ஆர்டர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கான கொள்களன்களை விநியோகிக்கும் போது இரண்டு அல்லது மூன்று கொள்களன்களை வைத்திருக்கும் குடும்பங்கள் அவற்றை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
இதன் காரணமாக இதுவரை ஒரு கொள்களன் கூட இல்லாத குடும்பங்களுக்கு அவற்றை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: