News Just In

2/11/2023 06:45:00 AM

இலங்கையில் பெண்கள் தொடர்பில் வெளியான தகவல்!

பலவேறு சந்தர்ப்பங்களில் கட்டுப்படியாகாததும் மற்றும் நம்பகமற்றதாகப் பார்க்கப்படுவதுமான, முறையான குழந்தைப் பராமரிப்பு (பகல் பராமரிப்பு) ஒழுங்குவிதிகள் இலங்கையில் இல்லாமை நாட்டின் பெண் தொழிலாளர் பங்கேற்புக்கு பெரும் இடையூறாக உள்ளது என்று வெளிப்படுத்தப்பட்டது.

இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை நாடாளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான நாடாளுமன்ற விசேட குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தலைமையில் நேற்று (09-02-2023) கூடிய போதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக அதிகமான பெண்கள் தொழில் செய்வதற்கு தூண்டப்படுவதாக வெரிட்டே ஆய்வு நிறுவனம் குழுவில் தெரிவித்தது.

எவ்வாறாயினும், நுழைவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகள் மற்றும் பாலின உணர்திறன் பெருநிறுவன கொள்கைகள் இல்லாமை, கடுமையான பாலின விதிமுறைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு ஆதரவுக்கு மேலதிகமாக துணையின் ஆதரவு இல்லாமை ஆகியவை பெண்களை தொழிலாளர் சக்தியில் பங்கேற்கும் திறனில் இருந்து தடுக்கின்றன என்பதும் வெளிப்படுத்தப்பட்டது.

No comments: