News Just In

1/31/2023 11:53:00 AM

அரச ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையில் அரசாங்கம்! வெளியான அறிவிப்பு




இந்த நாட்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில் இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், ஒவ்வொரு நிறுவனத்திலும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வேலை இந்த நாட்களில் செய்யப்படுகிறது.
தேவையற்ற ஊழியர்களுக்கு சுய ஓய்வு பெறும் முறையும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

திறைசேரியின் ஆலோசனைக்கு அமைய அமைச்சுக்களின் செயலாளர்கள் ஒவ்வொரு அமைச்சின் செலவினங்களைக் குறைப்பதற்கான சுற்றுநிரூபத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

தற்போது அரச சேவையில் இருப்பவர்களிடம் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை சுயமாக ஓய்வு பெறுவதற்கு அரச அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

எங்களின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு சுய ஓய்வு பெற விருப்பம் தெரிவித்தவர்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: