News Just In

1/24/2023 11:48:00 AM

ஓட்டமாவடியில் டெங்கு பரிசோதனை ஆரம்பம்.!




எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு நோயாளர்களை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்கின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.

இதன் அடிப்படையில் இன்று (திங்கள்கிழமை)ஓட்டமாவடி 208ஃபி கிராம சேவகர் பிரிவில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்று டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் யூ.எல்.எம்.ஜின்னாவின் தலைமையில் வீடுவீடாக சென்று டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களை பார்வையிட்டு அதனை அகற்றியதுடன் பொது மக்களுக்கு டெங்கின் தாக்கம் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.

இதன் போது 134 வீடுகள் பரிசோதிக்கப்பட்டதுடன் அதில் 05 வீட்டு உரிமையாளர்களுக்கெதிராக எச்சரிக்கையும் விடப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர் யூ.எல்.எம்.ஜின்னா தெரிவித்தார்.

வீடுகளை பரிசோதிக்கும் வேலைத்திட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.கே.ஜவ்பர், ஓட்டமாவடி 208ஃபி கிராம சேவகர் பிரிவின் சனசமுக நிலைய அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்


No comments: