இன்று (30) மற்றும் நாளை (31) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தேவையான நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக நீரைத் திறந்துவிட தீர்மானித்துள்ளமையால் இரு நாட்களுக்கு மின்வெட்டு இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் கொத்மலை மற்றும் ரன்தெனிகல நீர்த்தேக்கங்களில் இருந்து நீர்த்தேக்கங்களில் இருந்து போதியளவு நீரை திறந்து விடுவதற்கு மகாவலி அதிகாரசபையின் நீர் முகாமைத்துவ செயலகம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழமுக்கமாக வலுப்பெறுகின்ற காரணத்தால் மழை பெய்யும் சாத்தியம் அதிகரித்துள்ளதால் நீர்த்தேக்கங்கள் நிரம்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments: