News Just In

1/01/2023 08:14:00 AM

32வருட கல்விச்சேவையில் இருந்து அதிபர் திரு.சு.உதயகுமார் ஓய்வு!

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள முனைத்தீவு சக்தி மகா வித்தியாலத்தில் அதிபராக கடமையாற்றிய திரு.சு.உதயகுமார் 31.12.2022ம் திகதி ஓய்வுப்பெற்று செல்லகின்றார்.

இவர் 1990ம் ஆண்டு ஆசிரிய சேவையில் இணைந்து பின்னர் 2000ம் ஆண்டு அதிபராக கடமையேற்று 31.12.2022ம் ஓய்வுபெற்று செல்கின்றார்.

இவரிற்கான பிரியாவிடை நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்று நேற்றைய தினம் (31) அதிபர் அவர்களை அவரது வீடு வரைக்கும் பாண்ட்டு வாத்திய குழுவினரின் மரியாதை அணிவகுப்புடன் ஆசிரியர்கள் வீட்டிற்கு கொண்டுசென்று விட்டனர்.

இவர் 1990.03.16 - 2000.08.03 மட்/மண்டூர் 39 அ.த.க.பாடசாலை - ஆசிரியராக கடமையாற்றினார். பின்னர் அதே பாடசாலையில் 2000.08.04 அதிபராக பதவியுயர்வு பெற்று 2003.10.19 வரை அதிபராக கடமையாற்றினார்.

அதன்பிறகு 2003.10.20ம் திகதி இடமாற்றம் பெற்று மண்டூர் 40 அ.த.க. பாடசாலையில் அதிபராக 2009.02.01 கடமையாற்றினார்.

இவர் 2009.02.02ம் திகதி அதிபர் தரம் I பதவி உயர்த்தப்பட்டார். பின்னர் மண்டூர் 40ல் இருந்து இடமாற்றம் பெற்று 2009.02.02 இல் இருந்து 2018.06.25 வரை பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றினார். இக் காலத்தில் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய கபடி அணியினர் தேசிய ரீதியில் வெற்றி பெற்று உடற்கல்வி ஆசிரியர் இ.புவனேந்திரன் அவர்களின் உதவியுடன் இவ் வரலாற்று சாதனையை நிலைநாட்டினார். பின்னர் இடம்மாற்றம் பெற்று முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்தில் 2018.06.25 இல் இருந்து 2022.12.31 வரை கடமையாற்றி ஓய்வுபெற்றுள்ளார். இங்கு க.பொ.த. சாதாரண சித்தியினை 40% இல் இருந்து 80% மேல் உயர்த்தி பாடசாலைக்கு மேலும் பலம் சேர்த்து கொடுத்தார்.

No comments: