News Just In

1/01/2023 06:49:00 PM

2023 இல் நீண்ட விடுமுறை - அரச ஊழியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

2023ஆம் ஆண்டில் நீண்ட விடுமுறைகள் இடம்பெறவிருக்கின்ற நிலையில், அரச துறையினருக்கு நீடித்த விடுமுறைகள் கிடைக்கப்பெறவுள்ளன.

பெரும்பாலான பொது மற்றும் வர்த்தக விடுமுறைகள் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் வருவதால், 2023 ஆம் ஆண்டு நீண்ட வார இறுதிகளின் ஆண்டாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை துருத்து போயா மற்றும் ஏப்ரல் 7 ஆம் திகதி புனித வெள்ளி என்ற அடிப்படையில், 2023 ஜனவரி மாதம் முதல் வருடத்தில் ஒன்பது நீண்ட வார இறுதி நாட்கள் கிடைக்கப்பெறவுள்ளன.

சிங்களப் புத்தாண்டு வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வந்துள்ளதால் அடுத்த வாரம் நான்கு நாட்கள் வார இறுதியாக இருக்கும். மே தினம் ஒரு திங்கட்கிழமையும், வெசாக் போயா விடுமுறை மே 5 வெள்ளிக்கிழமையும் வருகிறது.

செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளுடன் நான்கு நாட்கள் வார இறுதி நாட்களாக அமைந்துள்ளன.

பின்னரான பௌர்ணமி போயா இந்த திகதிகளில் வருகின்றன. கிறிஸ்மஸ் டிசம்பர் 25 திங்கட்கிழமையும், உந்துவப் போயா டிசம்பர் 26 செவ்வாய்கிழமையும் இருப்பதால் டிசம்பரில் மற்றொரு நான்கு நாள் வார இறுதி நாட்கள் வருகின்றன.

சுதந்திர தினம், நவம் பௌர்ணமி போயா நாள், மகா சிவராத்திரி, ரம்ழான், பொசன் போயா, வப் போயா, தீபாவளி மற்றும் பௌர்ணமி போயா போன்ற சில பொது விடுமுறைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இவ்வாறான பொது விடுமுறைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்ற போது கடந்த காலங்களில் (அடுத்து வரும் திங்கட் கிழமை) சிறப்பு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதுண்டு.

No comments: