
(மொகமட் தஸ்ரிப் லத்தீப்)
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்றமட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் யேசுபிரான் உயிர்த்தெழுந்த நத்தார் திரு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு மறை மாநில ஆயர் பொன்னையா யோசப் ஆண்டகை தலைமையில் நள்ளிரவு ஆராதனை இடம் பெற்றது.
இதன்போது நத்தார் திருவிழாவை முன்னிட்டு ஆயர் பொன்னையா யோசப் ஆ ண்டகையினால் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப் பட்டது டன் நாட்டில் சமாதானம் நிலைத்திருக்கவும் ,நாட்டில் நிலவும் பொருளா தார நெருக்கடி நீங்கவும் இனங்களுக்கு இடையில் நல்லுறவு நிலை பெற வும் வேண்டி விசேட பிரார்த்தனை வழிபாடுகளும் ஏசு பிரானின் நற்போதனைகளை புகழ்ந்து நத்தார் கீதங்களும் இசைக்கப்பட்டன
இந்த நள்ளிரவு ஆராதனையில்கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களை யும் சேர்ந்த கிறிஸ்தவ பக்தர்கள் பெருமளவில் பங்கு கொண்டு வழிபாடு களில் ஈடுபட்டனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில்கேந்திர நகரங்களான செங் கலடி, வாழைச்சேனை, வாகரை , தேத்தாத்தீவு ஆயித்தியமலை உட்பட பல இடங்களில் ஏசு பிரான் உயிர்த்தெழுந்த நாளை நினைவு கூர்ந்து விசேட சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.
No comments: